Friday 22 December 2017

பொது அறிவு தகவல்கள் - பாசிகள்

பாசிகள்:-
🌳 இலை, தண்டு, வேர், வேறுபாடுகள் பெற்றிருப்பதில்லை
🌳 பச்சையம் பெற்றிருப்பதால் தமக்கு தேவையான உணவை தாமே தயாரித்துக் கொள்ளும்.
🌳 இவற்றின் செல்சுவர் செல்லுலோஸால் ஆனது.
🌳 இனப்பெருக்க வகைகள்
⭕️ தூண்டாதல் - (எ.கா.) ஸ்பைரோகைரா
⭕️ பாலில இனப்பெருக்கம் - ஸ்போர்கள்
⭕️ பால் இனப்பெருக்கம் - ஏணி இணைவு, பக்க இணைவு (எ.கா.) ஸ்பைரோகைரா
⭕️ பால் உறுப்புகள் - ஆந்த்ரிடியம், ஆர்க்கிகோனியம் (எ.கா.) காரா
பாசிகளின் வகைகள்:-
🌳 பாசிகள் அவற்றின் வண்ணங்கள் அடிப்படையில் பிரிக்கப்பட்டு உள்ளது.
⭕️ பச்சை
⭕️ பழுப்பு
⭕️ சிவப்பு
⭕️ நீலப்பச்சை

1. பச்சை
🔺 நிறமி -  பச்சையம்
🔺 வகுப்பு - குளோரோபைட்டா
🔺 சேமிப்பு உணவு - ஸ்டார்ச்
🔺 எ.கா. - கிளாமிடோமோனஸ் 

2.  பழுப்பு
🔺 நிறமி - ப்யூகோஸாந்தின்
🔺 வகுப்பு -  பேயோபைட்டா
🔺 சேமிப்பு உணவு - லாமினாரியன்
🔺 எ.கா. - சர்காஸம்

3. சிவப்பு
🔺 நிறமி - பைகோஎரித்ரின்
🔺 வகுப்பு - ரோடோபைட்டா
🔺 சேமிப்பு உணவு - ப்ளோரிடியன் ஸ்டார்ச்
🔺 எ.கா. - பாலிசை போனியா

4. நீலப்பச்சை
🔺 நிறமி - பைகோசயனின்
🔺 வகுப்பு - சயனோபைட்டா
🔺 சேமிப்பு உணவு -  சயனோ பைசியன்ஸ்டார்ச்
🔺 எ.கா. - ஆஸில்லடோரியா

🌳 மனிதர்கள், வீட்டு விலங்குகள், மீன்களுக்கு உணவாக பயன்படுத்த பயன்படும் பாசிகள் - உல்வா, லேமினாரியா, சர்காஸம், குளோரெல்லா
🌳 அகர் அகர் சிவப்பு பாசியில்  இருந்து பெறப்படுகின்றது.
(எ.கா.) ஜெலிடியம், கிராஸிலோரியா
🌳 பனிக்கூழ் தயாரிக்க பயன்படுவது - அகர் அகர்
🌳 சோதனை குழாயில் வளர்க்கபடும் தாவரங்களுக்கு வளர்தள பொருளாக பயன்படுவது -  அகர் அகர்
🌳 லேமினோரிய எனும் பழுப்பு பாசியில் இருந்து பெறப்படுவது - அயோடின்
🌳 மனிதர்களின் கழிவுநீர் சிதைக்க பயன்படுவது - குளோரெல்லா பைரெனோய்டோஸா
🌳 உலகிலேயே மிக வேகமாக வளரும் கடல்பாசி - இராட்சத கெல்ப்
🌳 இராட்சத கெல்ப் ஒரு நாளைக்கு எவ்வளவு வளரும் - 15 செ.மீ
🌳 இராட்சத கெல்ப் காணப்படும் இடம் -  கலிபோர்னியா
Tag: Useful for growing plants in the test tube - Agar Agar பெற is derived from brown lamineuria - iodine 🌳 Use of human disintegration - Clorella piranioidosa மிக The fastest growing ocean in the world - Giant Kelp 🌳 Giant Gelf grows a day - 15 cm 🌳 Giant Gapf Place - California

No comments: