Friday 22 December 2017

வங்காள மொழி கவிஞருக்கு ஞானபீட விருது

வங்காள மொழி கவிஞருக்கு ஞானபீட விருது | 1961-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஞானபீட விருது, சிறந்த இலக்கியவாதி ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 52-வது ஞானபீட விருது, பிரபல வங்காள மொழி கவிஞர் ஷாங்கா கோஷுக்கு வழங்கப்படுகிறது. எழுத்தாளர் நம்வர் சிங் தலைமையில் நடைபெற்ற ஞானபீடம் தேர்வுக்குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. 1932-ம் ஆண்டு பிறந்த ஷாங்கா கோஷ், ஏராளமான கவிதைகளை இயற்றி உள்ளார். அவரது கவிதைகள், பல்வேறு இந்திய, வெளிநாட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவர் ஏற்கனவே சாகித்யா அகாடமி விருதும் பெற்றுள்ளார். ஞானபீட விருது பெறுவோருக்கு ரொக்கப்பரிசு, பாராட்டு பத்திரம், சரஸ்வதி உருவ வெண்கல சிலை ஆகியவை வழங்கப்படும்.