Friday 22 December 2017

தென்பெண்ணை,செய்யாறு ஆகிய ஆறுகள் தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் பாய்கிறது?

301 தென்பெண்ணை,செய்யாறு ஆகிய ஆறுகள் தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் பாய்கிறது? திருவண்ணாமலை

302 வெண்ணாறு,காவிரி,வெட்டாறு ஆகிய ஆறுகள் தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் பாய்கிறது? நாகப்பட்டினம்

303 தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் ஓடும் ஆறுகள் எவை? காவிரி ,குடமுருட்டி, பாமணியாறு

304 தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஓடும் ஆறுகள் எவை? காவிரி ,கொள்ளிடம் ,குடமுருட்டி, பாமணி.

305 தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் ஓடும் ஆறு எது? கொள்ளிடம்

306 தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் ஓடும் ஆறுகள் எவை? காவிரி , கொள்ளிடம்

307 தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் ஓடும் ஆறுகள் எவை? காவிரி ,நொய்யல் ,உப்பாறு.

308 தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் ஓடும் ஆறுகள் எவை? காவிரி , வசிட்டாநதி

309 தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டத்தில் ஓடும் ஆறுகள் எவை? காவிரி , தென்பெண்ணை ,தொப்பையாறு.

310 தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓடும் ஆறுகள் எவை? தென்பெண்ணை ,தொப்பையாறு.

311 தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் ஓடும் ஆறுகள் எவை? காவிரி , பவானி ,அமராவதி ,நொய்யல்.

312 தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஓடும் ஆறுகள் எவை? அமராவதி ,சிறுவாணி.

313 தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் ஓடும் ஆறுகள் எவை? அமராவதி , நொய்யல்

314 தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஓடும் ஆறுகள் எவை? மருதா ஆறு ,சண்முகா ஆறு.

315 தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் ஓடும் ஆறுகள் எவை? வைகை , பெரியாறு

316 தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் ஓடும் ஆறுகள் எவை? வைகை, சுருளியாறு ,மஞ்சளாறு ,பெரியாறு..

317 தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் ஓடும் ஆறுகள் எவை? கௌசிக ஆறு, குண்டாறு ,வைப்பாறு ,அர்ஜீனா ஆறு..

318 தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஓடும் ஆறுகள் எவை? தாமிரபரணி ,மணிமுத்தாறு, கொடிமுடியாறு..

319 தமிழ்நாட்டில் கன்னியாக்குமரி மாவட்டத்தில் ஓடும் ஆறுகள் எவை? கோதையாறு ,பழையாறு.

320 தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஓடும் ஆறுகள் எவை? தாமிரபரணி ,மணிமுத்தாறு.

321 தமிழகத்தில் கல்லணை எந்த ஆற்றில் எந்த மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ளது? காவிரியாறு, தஞ்சாவூர் மாவட்டம்

323 6முதல் 14 வயதிற்கு உட்பட்டவர்கள் பள்ளிக்கு செல்லாமல் நின்று விடுவோரை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவர தமிழக அரசு அமைத்துள்ள கல்வி மையங்களுக்கு என்ன பெயர்? பள்ளி சாராக் கல்வி மையங்கள்

324 தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய பள்ளிவாசல் எங்குள்ளது? கீழக்கரை (22000 சதுரஅடி)

325 தமிழ்நாட்டில் வைகை வனவியல் கல்லூரி எங்குள்ளது? ஆண்டிப்பட்டி

326 தமிழ்நாடு அரசு திரைப்படப் பிரிவு வரலாற்றில் முதன்முதலாக தேசிய விருது பெற்ற திரைப்படம் எது? அண்ணா வாழ்கிறார் (அண்ணாவின் வாழ்க்கை வரலாறு)

327 பெண் கமான்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது? தமிழ்நாடு

328 தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்ற முதல் கவிஞர் யார்? கவிஞர் சுரதா

329 தமிழ்நாட்டில் எந்த மத்திய சிறையில் குற்றவாளிகளை அங்கேயே விசாரிக்கும் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது? சென்னை மத்திய சிறை (1999)

330 தமிழ்நாட்டில் எங்கு தாய்ப்பால் வங்கி உள்ளது? மதுரை

331 கன்னியாக்குமரி கடற்கரையில் எந்த தமிழக முன்னாள் முதல்வருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது? காமராஜர்

332 தமிழகப் பஞ்சாயத்துக்களில் உள்ள நூலகத்தின் பெயர் என்ன? அய்யன் திருவள்ளுவர் நூலகம்

333 தமிழக அரசியல் வரலாற்றில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்து பின்னர் முதல்வரானவர் யார்? மு.கருணாநிதி

334 தமிழகத்தில் கிழக்கு கடற்கரைச் சாலைத்திட்டம் எந்த இரு நகரங்களை இணைக்கிறது? சென்னை - கன்னியாக்குமரி

335 தமிழ்நாட்டில் ஹிந்தி கட்டாய மொழிப் பாடமாக்கப்பட்டது எப்போது? 1948 ஜீன் 20

336 தமிழ்நாட்டில் போலி வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தால் எத்தனை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது? மூன்று ஆண்டுகள்

337 உலகிலேயே முதல் பசுமை கட்டிடம் என்ற சான்றிதழ் பெற்ற சட்டசபை எது? தமிழ்நாடு சட்டமன்றம்

338 தமிழகத்தில் டைனோசரஸ் முட்டைகள் கிடைக்கப்பெற்ற இடம் எது? அரியலூர்

339 தமிழகத்தில் பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த விலங்கு எது? டைனோசரஸ்

340 தமிழகத்தில் நூற்றாண்டு காலமாக அகழ்வராய்ச்சிப் பணிகள் நடைபெறும் இடம் எது? ஆதிச்சநல்லூர்

341 தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் அமைந்துள்ள மாவட்டம் எது? திருநெல்வேலி

342 தமிழகத்தில் முது மக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் எது? ஆதிச்சநல்லூர்