Tuesday 26 December 2017

வரலாறு முக்கிய வினா விடைகள்-3


41. ரக்திகா என்பது

அ. பண்டைய இந்தியாவின் கலைப் பிரிவு

ஆ. பண்டைய இந்தியாவின் ஓவியப் பிரிவு

இ. பண்டைய இந்தியாவின் எடை முறை

ஈ. இவை எதுவும் சரியல்ல

42. கல்ஹானா என்பவர் எழுதிய ராஜதரங்கிணி என்னும் புத்தகம் எதைப் பற்றியது?

அ. மாவீரர் சிவாஜி பற்றியது

ஆ. காஷ்மீரின் வரலாற்றைப் பற்றியது

இ. நமது வேதங்களைப் பற்றியது

ஈ. இவை அனைத்துமே சரி

43. களப்பிறர் காலத்தில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மொழி

அ. சமஸ்கிருதம்

ஆ. பிராக்கிருதம்

இ. தெலுங்கு

ஈ. இவை அனைத்தும்

44. கஜுராகோ விஷ்ணு கோயிலைக் கட்டியவர்

அ. தாங்கர்

ஆ. கீர்த்திவர்மன்

இ. யசோதவர்மன்

ஈ. உபேந்திரர்

45. கற்கால மனிதன் முதலில் கற்றுக் கொண்டதாக கருதப்படுவது

அ. தீயினை உருவாக்க

ஆ. விலங்குகளை வளர்க்க

இ. சக்கரங்களை செய்ய

ஈ. தானியங்களை வளர்க்க

46. புத்த சமயத்தின் அடிப்படை கொள்கை

அ. தியானம்

ஆ. அறியாமை அகற்றுதல்

இ. நோம்பு

ஈ. திருடாமை

47. மௌரியர் காலத்தின் மிக உயர்ந்த நீதிமன்றமான அரசமன்றத்தின் அமைவிடம்

அ. கபில வஸ்து

ஆ. சாரநாத்

இ. கோசலம்

ஈ. பாடலிபுத்திரம்

48. ஹர்ஷ சரிதம் எழுதியவர்

அ. ஹர்ஷர்

ஆ. பாணர்

இ. ஹரிசேனர்

ஈ. தர்மபாலர்

49. சரக சமிதம் என்பது

அ. வானவியல் நூல்

ஆ. புத்த இலக்கியம்

இ. மருத்துவ நூல்

ஈ. கணித நூல்

50. நான்காம் புத்த சமய மாநாடு கூட்டப்பட்ட இடம்

அ. குந்தல்வனம்

ஆ. பெஷாவர்

இ. கனிஷ்கபுரம்

ஈ. கோட்டான்

51. போரில் உயிர்நீத்த வீரர்கள் நினைவாக நடப்பட்ட வீரகற்கள்

அ. பெருங்கல்

ஆ. நடுகல்

இ. வீரக்கல்

ஈ. கல்பாடிவீடு

52. முறையான எழுத்து முறை எதில் உருவானது?

அ. ஆரியர் காலம்

ஆ. சுமேரிய நாகரீகம்

இ. சிந்து சமவெளி நாகரீகம்

ஈ. எகிப்து நாகரீகம்

53. அலாவுதீன் கில்ஜியின் தந்தை

அ. கியாசுதீன்

ஆ. குத்புதீன்

இ. ஜலாலுதீன்

ஈ. நசுருதீன்

54. தோடர்மால் யாருடைய அவையிலிருந்த வருவாய் அமைச்சர்?

அ. ஜஹாங்கீர்

ஆ. அவுரங்கசீப்

இ. அக்பர்

ஈ. ஷாஜகான்

55. கீழ்க்கண்ட மன்னர்களை சரியான வரிசையில் எழுதுக

1. பெரோஷ் துக்ளக்

2. ஜலாலுதீன் கில்ஜி

3. பகலால் லோடி

4. சிக்கந்தர் லோடி

அ. 1, 2, 3, 4

ஆ. 2, 1, 3, 4

இ. 1, 2, 4, 3

ஈ. 2, 1, 4, 3

56. திரிபீடகங்கள் என்பது யாருடைய புனித நூல்?

அ. சமண மதம்

ஆ. புத்த மதம்

இ. இந்து மதம்

ஈ. கிறிஸ்தவ மதம்

57. கி.பி. 505 முதல் 587 வரையிலான காலத்தில் வாழ்ந்த மற்றும் விக்கிரமாதித்யன் அவையிலிருந்த வராகமித்திரர் ஒரு

அ. வானியல் நிபுணர்

ஆ. கணித மேதை

இ. தத்துவஞானி

ஈ. இவை அனைத்துமே

58. முகமது பின் துக்ளக் தலைநகரை தில்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றிய ஆண்டு

அ. 1319

ஆ. 1327

இ. 1339

ஈ. 1345

59. வேத காலம் என்பது

அ. கி.மு. 1500 முதல் கி.மு. 1000 வரை

ஆ. கி.மு. 1000 முதல் 500 வரை

இ. கி.மு. 500 முதல் 100 ஆண்டுகள்

ஈ. இவை எதுவும் இல்லை

60. முஸ்லிம் அல்லாதவரிடம் விதிக்கப்பட்ட ஜஸியா வரியை அறிமுகப்படுத்தியவர் யார்?

அ. அக்பர்

ஆ. ஜஹாங்கீர்

இ. அவுரங்கசீப்

ஈ. அலாவுதீன் கில்ஜி

விடைகள்

41. இ 42. ஆ 43. ஆ 44. இ 45. அ 46. ஆ 47. ஈ 48. ஆ 49. இ 50. அ

51. ஆ 52. ஆ 53. இ 54. இ 55. ஆ 56. ஆ 57. ஈ 58. ஆ 59. அ 60. ஈ

TAG: 60. Who introduced the jaziya line imposed by non-Muslims? A. Akbar B. Jahangir e. Aurangzeb D. Alauddin Khilji

No comments: