Friday 22 December 2017

தமிழ்நாடு - நீங்கள் அறிந்துகொள்ளவேண்டிய தகவல்கள் - 3

61 தமிழக கடற்கரையோர மாவட்டங்கள் எத்தனை? 13 
62 தமிழகத்தில் நிலவும் வெப்பநிலை அளவு என்ன? 18°- 43°
63 தமிழகத்தின் சராசரி மழையளவு என்ன? 958.5 மில்லி மீட்டர்
64 தமிழகத்தில் உள்ள மொத்த துறைமுகங்கள் எத்தனை? 12 துறைமுகங்கள்
65 தமிழகத்தில் உள்ள மொத்த சாகுபடி நிலங்களின் பரப்பளவு எவ்வளவு? 6557895 ஹெக்டேர்
66 தமிழகத்தின் உள்ள மொத்த சாகுபடி நிலங்களில் பாசனப் பரப்பு எவ்வளவு? 2944740 ஹெக்டேர்
67 தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் பயிரில் உணவுப்பயிர் உற்பத்தி பரப்பளவு எவ்வளவு? 4901000 ஹெக்டேர்
68 தமிழ்நாட்டு மக்களின் சராசரி தனிநபர் வருமானம் 2010-11ன் படி எவ்வளவு? 72993 ரூபாய்
69 தமிழகத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட மாவட்டம் எது? சென்னை மாவட்டம் (4681087 பேர் வசிக்கின்றனர்
70 தமிழக மாவட்டங்களிலேயே அதிக எழுத்தறிவு பெற்ற மாவட்டம் எது? கன்னியாக்குமரி (92.14%)
71 தமிழகத்தில் அதிக பெண்கள் கொண்ட மாவட்டம் எது? சென்னை (2323454 பெண்கள் உள்ளனர்)
72 தமிழகத்திலேயே அதிக மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது? சென்னை : ஒரு சதுர கிலோமீட்டருக்கு 26903 பேர் வசிக்கின்றனர்
73 தமிழகத்திலேயே மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? பெரம்பலூர் (564511 பேர்)
74 தமிழகத்திலேயே மிகக்குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது? தர்மபுரி
75 தமிழகத்திலேயே மிகக்குறைந்த அளவில் பெண்கள் உள்ள மாவட்டம் எது? நீலகிரி
76 தமிழகத்திலேயே மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது? நீலகிரி (ஒரு சதுரகிலோமீட்டருக்கு 288 பேர்)
77 மதராஸ் மாகாணம் தமிழ்நாடு என்று எப்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டது? 1969 ஜனவரி 14
78 தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய முதலமைச்சர் யார்? அண்ணாதுரை
79 தமிழகத்தில் உள்ள மெட்ராஸ் என்று சென்னை என பெயர் மாற்றப்பட்டது? 1996
80 தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்கு முன்னரே இருந்த மெட்ராஸ் மாகாணம் எப்போது உருவானது? 22-08-1639
81 தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வமான அரசு இணைய தளம் எது? http://www.tn.gov.in 
82 தமிழ்நாடு மாநில அரசு சின்னம் என்ன? திருவில்லிபுத்தூர் கோபுரம்
83 தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது? நீலகிரி வரையாடு
84 தமிழ்நாட்டின் மாநில பறவை எது? மரகதப்புறா
85 தமிழ்நாட்டின் மாநில மலர் எது? செங்காந்தள் மலர் (கார்த்திகை பூ) கிராமங்களில் உள்ள கண்ணுவலி கிழங்கு என்று கூறும் செடியின் பூ)
86 தமிழ்நாட்டின் மாநில மரம் எது? பனை மரம் (ஓலைச்சுவடிகள் பனை இலையில் உருவானதால் இது தேர்ந்தெடுக்கப்பட்டது)
87 தமிழ்நாட்டின் மாநில நாட்டியம் எது? பரத நாட்டியம்
88 தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது? கபடி
89 தமிழ்நாட்டின் மாநில தமிழ்த்தாய் வாழ்த்து எது? நீராரும் கடலுடுத்த – என்ற பாடல்
90 தமிழ்நாட்டின் காலண்டர் எதை அடிப்படையாகக் கொண்டது? திருவள்ளுவர் பிறந்த தினத்தை (திருவள்ளுவர் ஆண்டு)
91 உலகின் இரண்டாவது மிகப் பெரிய நீளமான கடற்கரை எது? எந்த மாநிலத்தில் உள்ளது? மெரினா கடற்கரை – சென்னை – தமிழ்நாடு
92 தமிழகத்தில் உள்ள எந்த நகரம் தென்னிந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுகிறது? சென்னை
93 தமிழகத்தில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை எங்கு யாரால் எப்போது கட்டப்பட்டது? 1640ல் பிரான்சிஸ்டே என்ற ஆங்கிலேயரால் சென்னையில்
94 தமிழகத்தில் உள்ள இந்தியாவின் முதல் மாநகராட்சி எது? சென்னை (1687)
95 தமிழ்நாடு இந்திய அளவில் எத்தனை சதவீதம் பரப்பளவை பெற்றுள்ளது? 4 சதவீதம்
96 தமிழ்நாடு பரப்பளவு அடிப்படையில் இந்தியாவில் எத்தனையாவது பெரிய மாநிலம் ஆகும்?  11வது பெரிய மாநிலம்
97 தமிழ்நாடு மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவில் எத்தனையாவது பெரிய மாநிலம் ஆகும்? 7வது மாநிலம்
98 தமிழக அரசின் முத்திரைச்சொல் எது? வாய்மையே வெல்லும்
99 தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றியது யார்? மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளை (நீராரும் கடலுடுத்த)
100 தமிழ்நாட்டில் பரப்பளவில் பெரிய மாவட்டம் எது? விழுப்புரம் (7217 சதுரகிலோமீட்டர்)
Tag: 96 is the largest state in India based on Tamil Nadu area? The 11th largest state 97 Which of these is the largest state of India in terms of population of Tamil Nadu? 7th State 98 What is the Tamil Nadu Government's Stamp? truth alone triumphs 99 Who passed the Tamil tidings of Tamil Nadu? Manonmaniyam P Sundarambillai Which is the largest district in Tamil Nadu? Villupuram (7217 sqm)

No comments: