தமிழக அரசு சார்பில் 2016ம் ஆண்டுக்கான பெரியார், அம்பேத்கர் அண்ணா விருது அறிவிப்பு

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:
  1. திருவள்ளுவர் விருது 2016 - புலவர் பா.வீரமணி,
  2. பெரியார் விருது 2016 - பண்ருட்டி ராமச்சந்திரன்,
  3. அம்பேத்கர் விருது 2016 - மருத்துவர் இரா.துரைசாமி,
  4. அண்ணா விருது 2016- கவிஞர் கூரம் மு.துரை,
  5. காமராஜர் விருது 2016 - டி.நீலகண்டன்,
  6. பாரதியார் விருது 2016 - கணபதிராமன்,
  7. பாரதிதாசன் விருது 2016 - கவிஞர் கோ.பாரதி.
  8. திரு.வி.. விருது 2016 - மறைமலை இலக்குவனார்,
  9. கி..பெ. விசுவநாதம் விருது 2016 - மீனாட்சி முருகரத்தினம்

 ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் நாளை காலை 10.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் முதல்வர் .பன்னீர்செல்வம் வழங்குகிறார். விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதி சான்றிதழ் வழங்கப்படும். இந்த விழாவில் அகவை முதிர்ந்த 50 தமிழறிஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் அரசாணைகள் வழங்கப்படும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் இருந்த பழைய கலைவாணர் அரங்கம் இடிக்கப்பட்டு, ரூ.63 கோடியில் புதிதாக கட்டப்பட்டது. புதிய கலைவாணர் அரங்கத்தை கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். ஜெயலலிதா பங்கேற்கும் நிகழ்ச்சிதான் முதன் முதலாக நடத்த வேண்டும் என்று ஓராண்டாக அப்படியே கிடப்பில் போட்டிருந்தனர். தற்போது ஜெயலலிதா மறைந்ததையடுத்து புதிய முதல்வர் .பன்னீர்செல்வத்தை வைத்து நாளை விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Tag: Thiruvalluvar Award 2016 - Pulavar P.Veramani, Periyar Award 2016 - Panrutti Ramachandran, Ambedkar Award 2016 - Doctor D. Duraiasamy, Anna Award 2016- poet Coulter Muthu, Kamarajar Award 2016 - D. Neelakandan, Bharathiar Award 2016 - Ganapathy, Bharathidasan Award 2016 - poet K. Bharathi. -If Award 2016 - Minesweeper, Kiape Vishwanatham Award 2016 - Meenakshi Murugathinam

Comments