Friday 22 December 2017

வீடற்றவர்களுக்கான 14-வது உலக கோப்பை கால்பந்து போட்டி (2016) எங்கு நடத்தப்பட்டது?



பொது அறிவு | வினா வங்கி

1. இந்தியா நெதர்லாந்து அரசுடன் எந்த மாநிலத்தில் விவசாயிகளின் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது?

2. பிராந்திய மொழிகளில் படிப்பதை ஊக்குவித்து மாதம் தோறும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை அறிவித்துள்ள இந்திய மாநிலம் எது?

3. வீடற்றவர்களுக்கான 14-வது உலக கோப்பை கால்பந்து போட்டி (2016) எங்கு நடத்தப்பட்டது?

4. இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள நவீன டாங்கிகள் மற்றும் ஆயுதங்களை பயன்படுத்தி, யமுனா நதிக் கரைக்கும், மதுரா நதிக்கரைக்கும் இடையே போர் ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது. அதன் பெயர் என்ன?

5. 2016- உலக இளைஞர்கள் திறமை தினத்தின் அடிப்படை நோக்கம் என்ன?.

6. சி.பி.எஸ்.சி. அமைப்பின் புதிய தலைவராக நியமனம் பெற்றவர் யார்?

7. துலுனி திருவிழா இந்தியாவின் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது?

8. திறமை மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தால் புதிதாக தொடங்கப்பட்டுள்ள போட்டித் திட்டத்தின் பெயர் என்ன?

9. 2016 கிராண்ட் பிரிக்ஸ் செஸ் கோப்பையை வென்ற பெண் யார்?

விடைகள்:

1. உத்தரபிரதேசம், 2.கோவா மாநில அரசு, கொங்கணி மற்றும் மராத்தி மொழிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.400 ஊக்கத் தொகை அறிவித்துள்ளது, 3. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவ் நகரில், 4. ஆபரேசன் மேக் பிரகார், 5. இளைஞர்களின் திறன் மேம்பாடு இந்த தினத்தின் அடிப்படையாகும். 2016-ல் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டது, 6. ராகேஷ் குமார் சதுர்வேதி, 7. நாகலாந்து, 8. இண்டியா ஸ்கில் காம்பெட்டிசன், 9. கரிகா டிரோனவல்லி
Tag: 1. Uttar Pradesh, 2.Government State Government has announced Rs 400 incentives per month to students studying in Konkani and Marathi languages. 3. Glasgow City of Scotland 4. Operation Mac Prakar 5. Youth Skills Development is based on this day. Implemented in 2016 to enhance the employment potential for youth, 6. Rakesh Kumar Chaturvedi, 7. Nagaland, 8. India Skill Competition, 9. Karika Dronavalli

No comments: